சினிமா

செம கெத்தா போஸ் கொடுத்த சினேகாவா இது! பயந்து நடுங்கி செய்யுற அலப்பறையை பார்த்தீர்களா! கணவரே வெளியிட்ட வீடியோ!!

Summary:

கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாகவே இரண்டாவது அலையாகப் பரவி பெரு

கடந்த ஆண்டு பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாகவே இரண்டாவது அலையாகப் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இத்தகைய பெரும் தொற்றுக்கு இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை உயிரிழக்கும் துயரமும் ஏற்பட்டது. 

இந்த நிலையில் கொடிய கொரோனாவில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள தடுப்பூசி அவசியம் என பலரும் தற்போது தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். மேலும் பல திரைப்பிரபலங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் அண்மையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை சினேகாவும் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ஊசி போடும்போது மிகவும் கெத்தாக போஸ் கொடுத்திருப்பார்.  ஆனால் உண்மையில் சினேகா தடுப்பூசி போடும்போது மிகவும் பயந்து நடுங்கியுள்ளார். அந்த வீடியோவை காமெடியாக பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.


Advertisement