"அச்சச்சோ இவங்களுக்கு இந்த நிலைமையா.." தற்கொலைக்கு முயன்ற 'SMS' பட நாயகி.! பரபரப்பு தகவல்.!

"அச்சச்சோ இவங்களுக்கு இந்த நிலைமையா.." தற்கொலைக்கு முயன்ற 'SMS' பட நாயகி.! பரபரப்பு தகவல்.!


sms-fame-actress-tries-to-commit-suicide-shocking-repor

சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனுயா. இந்தத் திரைப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். சந்தானம் ஊர்வசி ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காமெடியுடன் கூடிய காதல் கதையான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது.

cinemaஇந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற அனுயா தற்கொலைக்கு முயன்றதாக வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார் அனுயா.

cinemaஇது தொடர்பாக பேசி இருக்கும் அவர் " சிவா மனசுல சக்தி திரைப்படம் வெளியான நேரத்தில் தன்னுடைய புகைப்படங்களை சிலர் ஆபாசமாக மார்பிங் செய்து வீடியோ வெளியிட்டதால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெற்றோரின் உதவியாளர் அதிலிருந்து மீண்டு வந்ததாக தெரிவித்த அவர் பெற்றோர்கள் மட்டும் இல்லை என்றால் உயிருடன் இருந்திருக்க மாட்டேன்" எனவும் தெரிவித்திருக்கிறார்.