டான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்....! என்னனு பார்த்தீங்களா...

டான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்....! என்னனு பார்த்தீங்களா...



sk20-movie-release-date

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் டான். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்.கே. 20. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில்  சத்யராஜ், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து  இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை.