"எனக்கு ஒரு பாதை ஏற்படுத்திக் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்!" எஸ் ஜே சூர்யா நெகிழ்ச்சி!

"எனக்கு ஒரு பாதை ஏற்படுத்திக் கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்!" எஸ் ஜே சூர்யா நெகிழ்ச்சி!


Sj surya talking about karthik suburaj

கடந்த 2015ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும், தேசிய விருதினையும் வென்ற திரைப்படம் "ஜிகர்தண்டா". இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

jigarthanda

இந்நிலையில், 9 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" என்ற பெயரில் கடந்த 10ம் தேதி  வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த வெற்றியால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

இந்நிலையில் படத்தின் வெற்றியாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய எஸ் ஜே சூர்யா, "நான் நடிக்கும் ஆர்வத்தில் தான் சினிமாவிற்கு வந்ததேன். அதற்கு தகுந்தவாறு இறைவி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

jigarthanda

இந்தப் படம் என்னுடைய கேரியரில் மேஜிக் செய்துள்ளது. இதற்குப் பிறகு தான் முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து மேலும் எனக்கு ஒரு நடிப்பு பாதையை உருவாக்கி கொடுத்துள்ளார்" என்று கூறினார் எஸ் ஜே சூர்யா.