தனுஷின் 50வது படத்தில் இணைந்த நடிப்பின் அரக்கன்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தனுஷின் 50வது படத்தில் இணைந்த நடிப்பின் அரக்கன்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!



SJ Surya in dhanush in Rayan movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 50வது திரைப்படத்தை அவரே இயக்கி, நடித்து முடித்துள்ளார். 

Rayan

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, அமலா பால், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் செல்வராகம் உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர்.

 இந்தப் படத்திற்காக தனுஷ் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தின் மொத்த காட்சிகளையும் வெறும் 110 நாட்களிலேயே முடித்துள்ளார். இதனையடுத்து தற்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்கூடிய தீவிரமாக வேலை செய்து வருகிறது. 

Rayan

இந்த நிலையில் தனுஷின் 50வது திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிக்கும் எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவனின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.