தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளத்திலும் கலக்க போகும் எஸ் ஜே சூர்யா..

தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளத்திலும் கலக்க போகும் எஸ் ஜே சூர்யா..


Sj surya acting in malayalam movie

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாகவும், வில்லன் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருப்பவர் எஸ் ஜே சூர்யா. இவர் முதன்முதலில் 'வாலி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார்.

Sjsurya

இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களை இயக்கி வந்த எஸ் ஜே சூர்யா, நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் தொடர்ந்து நடித்து வருகிறார். முதன் முதலில் வில்லனாக 'மெர்சல்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இப்படத்திற்கு பின்பு சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து தற்போது மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

Sjsurya

இவ்வாறு தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்து கொண்டிருக்கும்போதே மலையாளத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. இச்செய்தி இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.