சினிமா

'தல' னா சும்மாவா!! படத்தை தடை செய்த கண்ணட சம்மேளனத்திற்கு 16 லட்சம் அபராதம்!!!

Summary:

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் நல்ல வசூலை பெற்று வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்தது.

இதனை கர்நாடக திரைப்பட வர்த்தக சம்மேளம் எதிர்த்து அந்த படத்தை வெளியிட கூடாது என எதிர்ப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பு, இந்திய போட்டி கண்காணிப்பு துறையில் புகார் தெரிவித்தது. இதனை விசாரித்த துறை கன்னட திரைப்பட சம்மேளத்திற்க்கு 12,60,000 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் இது தொடர்பாக போராட்டம் செய்த வாட்டாள் நாகராஜ் போன்றோர் மீது அபராதம் விதிக்க பரீசலிக்கபட்டு வருகிறது.


Advertisement