விஜய்யின் மகன் சஞ்சய் படத்தை நிராகரித்த சிவகார்த்திகேயன்.. இது தான் காரணமா?Sivakarthikeyan reject Jason Sanjay movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இதில் இவருடைய மகன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்து முடித்துவிட்டு குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இந்த நிலையில் லைகா நிறுவனம் சார்பாக திரைப்படம் இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகிறது.

ஆனால், அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடைபெற்றதாக தகவல் வெளியாகியது. இந்த பூஜையில் சஞ்சய் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்பட்டது.

Jason Sanjay

 இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் நடிகர் சிவகார்த்திகேயனை அணுகி கதை கூறியதாகவும், இதைக் கேட்டுவிட்டு இது தனக்கேற்ற கமர்ஷியல் அம்சங்கள் கொண்ட கதையில்லை என்று கூறி சிவகார்த்திகேயன் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல், விஜய்யை கேட்காமலேயே ஜேசன் விஜய் சினிமாவிக்கு வந்துவிட்டதால், இப்படத்தில் நடித்தால் அவரது அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதாலும் சிவகார்த்திகேயன் இப்படத்தை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.