சினிமா

நயன்தாராவுடன், சிவகார்த்திகேயன் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!.

Summary:

Sivakarthikeyan New movie with nayanthara

 பிரபல தொலைக்காட்சி மூலம் அறிமுகமான நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்துக்கொண்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீமராஜா படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தாலும். எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிவகார்த்திகேயன், ராதிகா, நயன்தாரா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை நடிகை ராதிகாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளதால் அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மூலமாக தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.


Advertisement