மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பது இவரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிப்பது இவரா? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!


Sivakarthikeyan Maveeran Movie

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் "பிரின்ஸ்" என்ற திரைப்படத்தில் நடித்துவந்தார். இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தீபாவளி அன்று வெளியாகயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் "மாவீரன்" படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி சூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிப்பதாக முன்பே கூறப்பட்டிருந்தது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக யார் நடிப்பது? என்பது குறித்த கேள்விகள் எழதொடங்கியது. இந்த நிலையில், விஜய் டிவியின் KPY நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான மோனிஷா பிளஸ்சி சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. 

இந்த தகவல் உண்மையா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் மாபெரும் வெற்றி காணும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.