பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்.! வெளிவந்த சூப்பர் தகவல்!! வேற லெவலில் இருக்குமே!!

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்.! வெளிவந்த சூப்பர் தகவல்!! வேற லெவலில் இருக்குமே!!


sivakarthickeyan-going-to-act-in-cricket-player-nataraj

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது படங்கள் என்றாலே ரசிகர் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி இவரது நடிப்பில் வெளிவரும் படங்களைப் பார்ப்பர்.

டான் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில், மற்றும் மண்டேலா' மடோன் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' போன்ற படத்தில் நடிக்கிறார்.

sivakarthickeyan

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பிரபல கிரிக்கெட் வீரரான நடராஜின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடராஜன் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி அருகேயுள்ள சிறுகிராமத்தை சேர்ந்தவர். இவர் ஐபிஎல் போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடி தனது திறமையை வெளிப்படுத்தியதால் அவர் தற்போது இந்திய அணியில் தேர்வாகி விளையாடி வருகிறார்.