4 கோடி.. பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி வழக்கு! ஏன்? என்ன நடந்தது??

4 கோடி.. பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் சிவகார்த்திகேயன் அதிரடி வழக்கு! ஏன்? என்ன நடந்தது??


sivakarthickeyan-complaint-on-producer-gnanavel-raja

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அவர் கடந்த 2019-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில், கே.இ.ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரித்த மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா, ராதிகா, சதீஷ், ரோபா ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதில் அவர், மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க தனக்கு ரூ.15 கோடி சம்பளம் நிர்ணயிக்கபட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் கொடுத்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதில் அவர், தனக்கு அளித்த ரூ.11 கோடியில் வருமான வரி பிடித்தம் செய்தே அளித்ததாகவும், ஆனால் அதனை அவர் வரிமானவரித்துறையிடம்  செலுத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை அவர் தயாரிக்கும் படங்களுக்கு முதலீடு செய்யத் தடை விதிக்க வேண்டும் எனவும், அவரது படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.