அயலான் படம் திரையிட திடீர் தடை.. மனமுடைந்த சிவகார்த்திகேயன்.!

அயலான் படம் திரையிட திடீர் தடை.. மனமுடைந்த சிவகார்த்திகேயன்.!



Siva Karthikeyan feel about ayalan movie

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "அயலான்" திரைப்படம் 2016ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ayalan

இந்நிலையில் இப்படத்தை தயாரித்த 24 ஏ எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் டி எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10கோடியை கடனாகப் பெற்றிருந்தது. இதை கே ஜே ஆர் நிறுவனம் ஏற்றுக்கொண்டு 3கோடியை செலுத்தியது.

மேலும் மீதிப் பணத்தை அயலான் அல்லது வேறு எந்தப் படத்தை வெளியிடுவதாக இருந்தாலும், அதற்கு முன்பே  பணத்தை திருப்பி தந்து விட வேண்டும் என்று 2021ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதே போல் ஆண்டுக்கு 13 சதவீத வட்டியுடன், 14 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித் தரவேண்டும்.

ayalan

அதனால் நாளை வெளியாகவுள்ள நடிகர் வைபவின் "ஆலம்பனா" படத்தையும் வெளியிட தடை விதிக்க கோரி டி எஸ் ஆர் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிபதி இந்த இரு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.