அஜித் படத்தை நம்பி ரீமேக் செய்த சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நஷ்டம்.!Siranjeevi salary return bolo shankar

சிரஞ்சீவி நடித்த போலோ சங்கர் திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் தனது சம்பளத்தை திருப்பி கொடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் சிரஞ்சீவி. இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார். 

siranjeevi

இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு சகோதரியாக கீர்த்தி சுரேஷும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னாவும் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

siranjeevi

இந்த படத்தால் தயாரிப்பாளர் கடுமையான பண நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் தயாரிப்பாளரின் நஷ்டத்தை சரி செய்யும் வகையில் தனது சம்பளத்தில் இருந்து 10 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். தற்போது சிரஞ்சீவியின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.