மறைந்த நடிகர் சிரஞ்சீவியின் இரங்கல் கூட்டத்தில் சிரித்தவாறு இருந்த உறவினர்கள்! ஏன் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

மறைந்த நடிகர் சிரஞ்சீவியின் இரங்கல் கூட்டத்தில் சிரித்தவாறு இருந்த உறவினர்கள்! ஏன் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

கன்னட சினிமாவின் பழம்பெரும் நடிகர்  சக்திபிரசாத்தின் பேரன் சிரஞ்சீவி சார்ஜா. இவர் பிரபல நடிகர் அர்ஜுனின் மிகநெருங்கிய உறவினர் ஆவார்.  4 வருடங்களாக அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்த அவர் கதாநாயகனாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 சிரஞ்சீவி சார்ஜா கடந்த 10ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை  மேக்னா ராஜை கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் படத்தில் நாயகியாக நடித்தவர். மேலும் அவர் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். 

 இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக கடந்த மாதம் திடீர் மரணமடைந்தார்.அவரது மரணம்  ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகர் சிரஞ்சீவி இறந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் குடும்பத்தினர் இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது எடுத்த  புகைப்படங்களை மேக்னா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அதில் அனைவரும் சிரித்தவாறு இருந்தனர். 

மேலும் அதில் மேக்னா  அன்புக்குரிய சிரு..சிரு என்றால் கொண்டாட்டம்தான். இதற்கு முன்னால் எப்படியோ அப்படியே தான் இனி எப்போதும். அப்படியில்லாமல் வேறு மாதிரி இருந்தால் நீங்கள் அதைவிரும்ப மாட்டீர்கள் என எனக்கு தெரியும். நீங்கள் தான் என் புன்னகைக்கு காரணம். எனக்கு நீங்கள் கொடுத்த இந்த குடும்பம் மிகவும் விசேஷமானது. எப்போதும் நாங்கள் ஒன்றாக நீங்கள் நினைத்தது போல வாழ்வோம். அன்பு, சிரிப்பு, நேர்மை எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையுடன் நாங்கள் வாழ்வோம். லவ் யு பேபி மா என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo