நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி.. கண்களை குளமாக்கும் சின்ன கலைவாணர் நிகழ்ச்சி.! எந்த சேனலில்.? எப்போது தெரியுமா.?

நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி.. கண்களை குளமாக்கும் சின்ன கலைவாணர் நிகழ்ச்சி.! எந்த சேனலில்.? எப்போது தெரியுமா.?


sinna-kalaivanar-show-in-vijay-tv


சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் தமிழ் திரை உலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் தனது வீட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி பேசி கொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு எக்மோ கருவி பொருத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நடிகர் விவேக் எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 17-ம் தேதி காலை உயிரிழந்தார். 59 வயதான விவேக்கின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் விவேக்கை நினைவுக்கூறும் வகையில் விஜய் தொலைக்காட்சி ‘சின்னக்கலைவாணர்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. நகைச்சுவை நடிகர்கள் ஹரத்தி மற்றும் கணேஷ், விஜய் டிவி நட்சத்திரங்கள் அறந்தாங்கி நிஷா, நந்தினி, ஈரோடு மகேஷ், ஆதவன், இயக்குனர் வசந்த் உள்ளிட்ட விவேக்குடன் பணிபுரிந்த நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு அவரைப் பற்றி நினைவு கூர்ந்துள்ளனர். 

சின்னக்கலைவாணர் நிகழ்ச்சி விஜய் டிவி-யில் ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதன் ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.