சின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சன் டிவியின் மூலமாக பிரபலமானவர்!.

சின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சன் டிவியின் மூலமாக பிரபலமானவர்!.


sinmayi-talk-about-sun-tv-staff


பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார்.

அக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள பாடகி சின்மயி, தொடர்ந்து தன்னை போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துவருகிறார்.

பெண் ஒருவர் சன் டிவி, கலைஞர் டிவி போன்ற பெரிய இடங்களில் பணிபுரிந்த ரமேஷ் பிரபா என்பவர் பற்றி குற்றம் சாட்டியுள்ளார். அதனை சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அப்பெண் கூறியிருப்பதாவது,  தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை சந்தித்தேன், அப்போது அவர் தன்னை தொடக்கூடாத இடங்களில் கை வைத்து, முத்தம் கொடுத்து இதுபோல் என் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்தால் தொகுப்பாளினியாக பணிபுரிய வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியதாக பதிவு செய்துள்ளார்.