சினிமா

6 வருஷத்திற்கு பிறகு அம்மாவான பிரபல பாடகி! ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கை! என்னனு பார்த்தீர்களா!

Summary:

இந்தியளவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவராக இருப்பவர் ஷ்ரேயா கோஷல். இவர் ஹிந்தி, தெலுங

இந்தியளவில் மிகவும் பிரபலமான பாடகிகளில் ஒருவராக இருப்பவர் ஷ்ரேயா கோஷல். இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களிலும் பல்வேறு பாடல்களை பாடி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார். மேலும் இவரது அழகிற்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலத்தில் பாலிவுட் பாடல்களை பாடி வந்த அவர் தமிழில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ஜூலி கணபதி என்ற படத்தில் எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் ரசிகர்களை மயக்கும் வண்ணம் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

ஸ்ரேயா கோஷல் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலர் ஷீலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ஸ்ரேயா கடந்த சில நாட்களுக்கு முன்பு உற்சாகமாக பகிர்ந்திருந்தார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரேயா கோஷல், நாங்கள் குழந்தையின் பெயரை பற்றி இதுவரை யோசிக்கவில்லை. குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் மட்டுமே இதுகுறித்து கேட்டுள்ளோம். இப்போது நான் அதை என் ரசிகர்களிடமும் கேட்க நினைக்கிறேன். கண்டிப்பாக அவர்கள் நல்ல அர்த்தமுள்ள, தனித்துவம் வாய்ந்த ஒரு பெயரை என் குழந்தைக்கு கூறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
 


Advertisement