அடேங்கப்பா.. இங்கிலீஷில் ஸ்டைலிஷ் தமிழச்சியாய் பாடி அசத்திய சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி..! வீடியோ nவைரல்..!!Singer rajalakshmi sing English song

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்புபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கணவன் - மனைவியாக கலந்து கொண்டவர்கள் செந்தில் - ராஜலட்சுமி. இவர்கள் சூப்பர்சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தனர். 

cinema news

மேலும் செந்தில் கணேஷ் தனது விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டி சென்றார். அதோடு இந்த நிகழ்ச்சிதான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களது நாட்டுப்புற பாடலை ஒலிக்க செய்தனர்.

cinema news

தற்போது இவர்கள் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இருவரும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். என்னதான் ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் பாடல்பாடுவதை விடாமல் இருந்து வருகின்றனர் இந்த தம்பதி.

இதனால்அடிக்கடி பல பாடல்களை தங்களது சொந்த ரெகார்டிங் ஸ்டுடியோ மூலம் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஸ்டைலிஷ் தமிழச்சி என்ற பெயரில் ராஜலட்சுமி புதிய பாடலை பாடியிருக்கிறார். இதுவரையிலும் நாட்டுப்புறபாடல், குத்து பாடல்களை பாடிவந்த ராஜலக்ஷ்மி முதல்முறையாக ஆங்கிலத்தில் பாடி அசைத்தியிருக்கிறார்.