சினிமா

எல்லா பக்கமும் அழகா இருக்கே..! சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமியின் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்கள்..

Summary:

எல்லா பக்கமும் அழகா இருக்கே..! சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமியின் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்கள்..

விஜய் தொலைக்காட்சி எத்தனையோ கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதியினர்.

செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று பட்டத்தை கைப்பற்றினார். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் பல்வேறு படங்களில் பாடும் வாய்ப்புகள் இவர்களுக்கு குவிந்துவருகிறது. சார்லி சாப்ளின் 2 படத்தில் இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் இன்றுவரை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்புகிறது. மேலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அய்யா சாமி என்ற பாடலை பாடியுள்ளார். இந்த  பாடலும் ரசிகர்கள்  மத்தியில் ஹெட் அடித்து உள்ளது.

இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் இருவரும், காதலர் தினத்தன்று காதலர்  தின ஸ்பெஷலாக  அவர்களுது  அன்பு காதலை வெளிப்படுத்தி விதவிதமான போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி  வருகிறது.

 

 


Advertisement