தமிழகம் சினிமா

மிகவும் பிரபலமான நடிகர் செய்யும் காரியமா இது!! கடுமையாக எச்சரிக்கை விடும் நீதிமன்றம்

Summary:

கடந்த சில வருடங்களாக சிம்புவை பற்றி அடிக்கடி எதாவது செய்திகள் வந்த வண்ணம் தான் இருந்தன. எப்படியும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொளவதையே வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவருக்கு அதிகமாக பட வாய்ப்புகள் வராமல் இருந்தன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு தற்போது தான் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கின்றார். செக்கச்சிவந்த வானம், மாநாடு அடுத்து சுந்தர்.சி படம் என தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் 2013-ல் பேஷன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து படம் எடுக்க முன்வந்துள்ளது. அதற்காக ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.50 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளனர்.

ஆனால், இன்று வரை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை, சிம்புவும் கால்ஷீட்டே கொடுக்கவில்லையாம். இதனால் தற்போது நீதிமன்றத்திற்கு சென்ற பேசன் மூவி மேக்கர்ஸ் அப்போது ரூ.50 லட்சம் கொடுத்தோம், அதற்க்கு வட்டி ரூ 33.50 லட்சம்.

அதை எடுத்து வைத்து விட்டு செல்லுங்கள், இல்லையென்றால் அவர் கார், செல்போன் என அனைத்தையும் ஜப்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதற்க்கு நீதிபதி ‘ சிம்பு 4 வாரத்திற்குள் இதற்கான கடன் பாதுகாப்பை அளிக்க வேண்டும், இல்லையென்றால் அவர் வீட்டில் டிவி, காட்டில், மிக்சி, கிரைண்டர் வரை பறிமுதல் செய்யப்படும்’ என்று கூறியுள்ளார்.


Advertisement