அதுமட்டுமில்லை... நடிகர் சிம்புக்குள் இவ்வளவு மாற்றங்களா! அவரது தங்கை இலக்கியா வெளியிட்ட சூப்பரான தகவல்! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!

அதுமட்டுமில்லை... நடிகர் சிம்புக்குள் இவ்வளவு மாற்றங்களா! அவரது தங்கை இலக்கியா வெளியிட்ட சூப்பரான தகவல்! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!


Simbu sister tweet about her brother transformation

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு  நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற  படத்தில் நடிக்கிறார். 

அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இதன் படிப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
இத்திரைப்படத்திற்காக சிம்பு அவரது உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து சிம்பு  உடல் எடை குறைத்து நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, தனது மாற்றத்துக்கு உதவிய அனைவருக்கும் நன்றி கூறியிருந்தார். இந்நிலையில் சிம்புவின் டிவீட்டை பகிர்ந்த அவரது தங்கை இலக்கியா, சிம்பு பல மாற்றங்களைக் கொண்டுள்ளார். இந்த மாற்றம் எடைக்குறைப்பு பற்றியது மட்டுமல்ல. தன்னை பற்றியும், வாழ்க்கையின் நோக்கம், லட்சியங்களை பற்றியும்தான். இந்தப் பயணத்தில் சில நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அவரது இலக்கை நோக்கி அவர் கடுமையாக உழைத்ததை நான் பார்த்திருக்கிறேன். அவரது மன உறுதிக்குப் பாராட்டுகள் என  இலக்கியா தெரிவித்துள்ளார்.