ப்ளீஸ்.. இந்த விஷயத்தில் பிள்ளைகளை டார்ச்சர் பண்ணாதீங்க.. விட்ருங்க.! நடிகர் சிம்பு அதிரடி பேச்சு!!

ப்ளீஸ்.. இந்த விஷயத்தில் பிள்ளைகளை டார்ச்சர் பண்ணாதீங்க.. விட்ருங்க.! நடிகர் சிம்பு அதிரடி பேச்சு!!


simbu-request-parents-about-marriage

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோவாக அவதாரமெடுத்து 
தனது அசத்தலான நடிப்பால் அனைவரின் மனதையும் கவர்ந்து பிரபலமானவர் நடிகர் சிம்பு. இடையில் உடல் எடை கூடியநிலையில் அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் சில தோல்வியையே தழுவியது. பின் கடின உடற்பயிற்சியால் உடல் எடையை குறைத்த அவர்  மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். 

அவர் தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படத்தில் நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு' திரைப்படம் வரும் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

simbu

அப்போது பேசிய நடிகர் சிம்பு, கல்யாணம் பண்ணிக்க சொல்லி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை டார்ச்சர் செய்ய வேண்டாம். அவ்வாறு அழுத்தம் கொடுப்பதால்தான் தவறான திருமணங்கள் அதிகளவில் நடக்கிறது. பிள்ளைகளை விட்டுவிடுங்கள். அவர்களது வாழ்க்கையை அவர்களே பார்த்து கொள்ளட்டும். மேலே இருப்பவன் அவர்களுக்கான ஒருத்தரை நிச்சயம் அனுப்புவார் என கூறியுள்ளார்.