நடிகர் சிம்புடன் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முக்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?

நடிகர் சிம்புடன் தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முக்கிய பிரபலம்! யார் அவர் தெரியுமா?


Simbu pramji

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி வந்தார்.

இதனால் சில நாட்களாக இவரின் படங்கள் வெளியாகாமல் இருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். 

Paramji

இப்படத்தில் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா. மனோஜ், கல்யாணி பிரதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பிரேம்ஜிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அவரின் பிறந்தநாளை நடிகர் சிம்புடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.