நீங்க இல்லாம நான் இல்ல... மிக உருக்கமாக புத்தாண்டு வாழ்த்து கூறிய சிம்பு.! நெகிழ்ந்த ரசிகர்கள்!!

நீங்க இல்லாம நான் இல்ல... மிக உருக்கமாக புத்தாண்டு வாழ்த்து கூறிய சிம்பு.! நெகிழ்ந்த ரசிகர்கள்!!


simbu-new-year-wishes

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிம்பு. அவர் இறுதியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறும் வகையில் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம். பலர் வாழ்க்கையின் எல்லையை தொட்டு மீண்டிருப்பர். இழப்பையும் நன்மையையும் கடந்த வருடம் கடந்து வந்திருக்கிறோம். இறைவனின் பெருங்கருணையால் இந்தப் புதிய வருடத்தைக் காணவிருக்கிறோம்.

simbu

தனிப்பட்ட முறையில் ‘மாநாடு' படத்தை மிகப்பெரிய வெற்றியாகப் பரிசளித்த ஆண்டு இவ்வாண்டு. மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021ஆம் ஆண்டை முடிக்கிறேன். 2022ஆம் ஆண்டும் இதே மகிழ்வுடன் எனக்கும் உங்களுக்கும் அமைய வேண்டிக் கொள்கிறேன்.

என்னை எப்போதும் உங்களில் ஒருவனாக பார்த்துக் கொள்ளும் என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், திரையுலக சொந்தங்களுக்கும், என்றென்றும் எனக்கு ஆதரவாக விளங்கும் பத்திரிகை மற்றும் ஊடக பெருமக்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நலமே வாழ்க. நீங்க இல்லாம நான் இல்ல என தெரிவித்துள்ளார்.