"இது வெறும் ட்ரைலர்தான்"! யூட்யூபில் மாஸ் காட்டும் பத்து தல ட்ரெயிலர்!simbu-new-movie-trailer-hits-14-million-views-in-24-hou

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக அறிமுகமானவர் சிம்பு. தன்னுடைய அசாத்தியமான நடிப்பாலும், அபாரமான நடன திறமையாலும், திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். சில காலங்களாக திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்த இவர் மாநாடு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி  கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

simbuதற்போது இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பத்து தல. இந்தத் திரைப்படத்தில் சிம்புவுடன், பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதனை முன்னிட்டு படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்களும் தளபதி விஜய் உட்பட திரை உலக பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

simbuஇதனைத் தொடர்ந்து படத்தின் டிரைலர் இணையதளத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இதன் ட்ரெய்லருக்கு ரசிகர்களிடம் அமோகமான வரவேற்பு  கிடைத்திருக்கிறது. வெளியிட்ட 24 மணி நேரங்களிலேயே 14 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது பத்து தல. இந்த ட்ரெய்லரின் வெற்றியை தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் திரைப்படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.