தாடி மீசையெல்லாம் இல்லாம மனுஷன் ஆளே மாறிட்டாரு!! சிம்புவின் புது தோற்றம்.. வைரல் வீடியோ..Simbu new look photo goes viral

நடிகர் சிம்பு தாடியை எடுத்து, புது கெட்டப்புக்கு மாறியுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிம்பு உடல் எடை கூடி, பார்ப்பதற்கே மிகவும் குண்டாக மாறினார். ஒருகாலத்தில் காற்றில் பறந்து பறந்து நடனம் ஆடிய அவரால், படத்தில் நடிப்பதுகூட சிரமாக மாறியது. அந்த அளவிற்கு அவரது உடல் எடை பல்வேறு விமர்சனங்களை கொடுத்தது.

simbu

இந்நிலையில்தான் நீண்ட முயற்சிக்கு பிறகு சிம்பு தனது உடல் எடையை பலமடங்கு குறைத்து, மீண்டும் பழைய சிம்புவாக ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனால், அதன்பின் அவர் நடித்த ஈஸ்வரன் படத்திலும், மாநாடு படத்திலும் தாடி மீசையுடன் தான் நடித்திருந்தார்.

இந்நிலையில், தனது வீட்டின் சமயலறையில் தான் சமைத்துக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சிம்பு, "லாக்டவுன் என்பதால் தாடி மீசையெல்லாம் எடுத்துவிட்டேன், என் முகமே இப்பதான் எனக்கு தெரியுது. இவ்வளவு நாள் தாடியே வெச்சிருந்ததால் தெரியல" என பேசியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.