எதிர்பார்க்கலைல.. நானும்தான்! இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கபோவது இவர்தான்.! வெளிவந்த சூப்பர் வீடியோ!!

எதிர்பார்க்கலைல.. நானும்தான்! இனி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கபோவது இவர்தான்.! வெளிவந்த சூப்பர் வீடியோ!!


Simbu going to host Bigboss ultimate show

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்து கொண்ட பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தி, இரண்டாவது வாரத்தில் சுஜா வருணி மற்றும் மூன்றாவது வார இறுதியில் ஷாரிக் மற்றும் அபிநய் ஆகியோர் வெளியேறினர்.

இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என அனைவர் மத்தியிலும் பெரும் ஆவல் எழுந்தது.

இந்நிலையில் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. அதனை உறுதிபடுத்தும் வகையில் தற்போது ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் சிம்பு, வெள்ளை கலர் கோர்ட் சூட் என கெத்தாக ஸ்டைலாக சவருகிறார். மேலும் அவர் எதிர்பார்க்கலைல , இத நானே எதிர்பார்க்கலை என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.