சினிமா பிக்பாஸ்

சிம்பு கொடுத்த செம அசத்தல் கிப்ட்.! இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன பிக்பாஸ் தர்ஷன்!! புகைப்படம் இதோ !!

Summary:

Simbu gave gift to dharshan

பிக்பாஸ் சீசன் மூன்று  கடந்த 105 நாட்களாக மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாக நிலையில், கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி கட்டத்திற்கு தேர்வாகினர்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போவது யார் என ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருந்த நிலையில், அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி 50 லட்சம் பரிசு தொகையை வென்றார். மேலும் இரண்டாம் இடத்தை சாண்டி கைப்பற்றினர். மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் கைப்பற்றினர்.

 இந்நிலையில் பிரபல நடிகர் சிம்பு சாண்டியின் வீட்டிற்கு வருகை தந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் அங்கு அவர் ரசனையும் சந்தித்து பேசியுள்ளார். 

 அதுமட்டுமின்றி சிம்பு தர்சனை வாழ்த்து பேசியதோடு அவருக்கு ஹீரோ என்ற புத்தகத்தையும் பரிசாகக் கொடுத்து அசத்தியுள்ளார். இதனால் தர்ஷன் பெரும் உற்சாகம் அடைந்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 


Advertisement