சினிமா

குக் வித் கோமாளி பைனலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த பிரபல மாஸ் ஹேண்ட்சம் ஹீரோ! யார்னு தெரியுமா??

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்து ரசித்துப் பார்க்கும் வகையிலும் வித்தியாசமாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

 முதல் சீசனில் போட்டியாளர்களாக பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் வனிதா வெற்றியாளரானார். இந்த நிலையில் இரண்டாவது சீசனில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல் படப்பிடிப்புகள் அண்மையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமின்றி குக்வித் கோமாளி சீசன் 2வில் கனி வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளதாகவும், ஷகிலா இரண்டாவது இடத்தையும்,  அஸ்வின் மூன்றாவது இடத்தைப் பெற்றதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.


Advertisement