சிம்பு வெளியிட்ட ஒற்றை வீடியோவால் கதிகலங்கி நிற்கும் ரசிகர்கள்; என்னதான் நடக்கபோகிறதோ!

சிம்பு வெளியிட்ட ஒற்றை வீடியோவால் கதிகலங்கி நிற்கும் ரசிகர்கள்; என்னதான் நடக்கபோகிறதோ!


simbu-advices-for-his-fans

சிம்புவின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. அந்த படம் வெளியாகும்போது ரசிகர்கள் எப்படி நடந்து கொண்டால் சிம்புவிற்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகர் சிம்பு சில காலங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார் சிம்பு. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை வைத்து மூன்று படங்கள் இயக்கவுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் புகழாரம் சூட்டினார்.

தற்பொழுது சுந்தர் சி இயக்கத்தில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என்ற படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி படம் வெளியாக உள்ளது. 

simbu

இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் வைத்து அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும். அதேபோல், படம் வெளியாகும் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட் அவுட், பாலபிஷேகம் போன்ற வீண் செலவுகளை செய்ய வேண்டாம். அது முக்கியம் கிடையாது. 

அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு புதிய உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை நான் காப்பாற்றுவேன். எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்" என ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார் சிம்பு.