முதன் முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கும் சிம்புவின் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது! வைரலாகும் புகைப்படம்.

Simbu


Simbu

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சில நாட்களாக பல்வேறு பிரச்சனைகளில் சிக்கிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி வந்தார்.

இதனால் சில நாட்களாக இவரின் படங்கள் வெளியாகாமல் இருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சிம்பு.

Maanaadu

இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக துவங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.