சினிமா

நெடுநெடுனு வளர்ந்து ஹீரோயினாக மாறிவிட்ட சில்லுனு ஒரு காதல் குட்டி பொண்ணு! சேலையில் ஜொலிக்கும் அழகு! வைரலாகும் புகைப்படங்கள்.

Summary:

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த ஸ்ரேயா சர்மாவின் தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த ஸ்ரேயா சர்மாவின் தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

போத்தீஸ் உள்ளிட்ட சில பிரபலமான விளம்பர படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. விளம்பரங்களில் நடித்துவந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா - தோதிகாவுக்கு மகளாக, ஐஷு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும், படத்தில் இவர் வரும் காட்சிகள் ரசிகர்கள் மனதில் இன்றுவரை இடம்பிடித்துள்ளது. சில்லுனு ஒரு காதல் படத்தை அடுத்து ஹிந்தி படங்களில் கவனம் செலுத்திவந்த இவர் கடைசியாக நீதானே என் பொன்வசந்தம் என்ற தமிழ் படத்தில் சமந்தாவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துவரும் இவருக்கு தற்போது 23 வயதாகிறது. குழந்தை நட்சத்திரமாக இவரை ரசிகர்கள் திரையில் பார்த்தநிலையில் தற்போது நெடு நெடுனு வளர்ந்து ஹீரோயினாக மாறிவிட்டார் ஸ்ரேயா சர்மா. 6 வருடங்களுக்கு முன்பே, அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டே Gayakudu என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்துவிட்டார் ஷ்ரேயா சர்மா.

இந்நிலையில் சினிமா மட்டும் இல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் தற்போது இவர் தான் சேலை அணிந்துள்ள சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்க்கும் தமிழ் ரசிகர்கள், விரைவில் தமிழ் படம் ஒன்றில் நாயகியாக காட்சி கொடுங்கள் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Advertisement