"என்னை விட வயது குறைந்த நடிகர்களுடன் ரொமன்ஸ் பண்ண ஆசை" சில்லுனு ஒரு காதல் பூமிகாவின் சர்ச்சை பேட்டி..

"என்னை விட வயது குறைந்த நடிகர்களுடன் ரொமன்ஸ் பண்ண ஆசை" சில்லுனு ஒரு காதல் பூமிகாவின் சர்ச்சை பேட்டி..


Sillunu oru kadhal actress boomika controversy interview about heros

இந்திய திரைபட நடிகையான பூமிகா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் திரைபடங்கள் நடித்திருக்கிறார். தமிழில் 'பத்ரி' படம் மூலம் அறிமுகமாகினார். இதன்பின் சூர்யா, ஜோதிகா நடித்த  'சில்லுனு ஒரு காதல்' திரைபடம் மூலம் பிரபலமானார்.

பூமிகா

மேலும், 2007ஆம் வருடம் தனது யோகா ஆசிரியரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதன்பின் படவாய்ப்புகள் குறைய தொடங்கின. இருந்தபோதிலும் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பூமிகா அளித்த பேட்டி வைரலாகி திரைதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பேட்டியில் அவர் கூறியதாவது, "கதாநாயகர்கள் தன் மகள் வயது இருக்கும் பெண்ணுடன் கூட ரொமன்ஸ் காட்சியில் நடிக்கின்றனர். ஆனால் கதாநாயகிகளுக்கு திருமணம் ஆனாலே மார்க்கெட் இல்லாமல் செய்து விடுகின்றனர். ஹீரோக்கள் இவ்வாறு செய்வதை ஏற்றுகொள்ளும் ரசிகர்கள் ஹீரோயின் கள் தன்னை விட வயது குறைந்த ஆணுடன் நடித்தால் ஏற்றுகொள்ள மாட்டார்களா" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பூமிகா

மேலும், நானும் என்னை விட சிறுவயது ஆணுடன் ரொமன்ஸ் காட்சியில் நடிக்க ஆர்வமாகவும், தயாராகவும் உள்ளேன் என்று பூமிகா கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது திரைதுறையினரிடம் அதிர்ச்சியையும்,ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.