சினிமா

திகிலூட்டும் அனுஷ்காவின் சைலன்ஸ் பட ட்ரைலரை வெளியிட்ட மக்கள் செல்வன்! மிரண்டுபோன ரசிகர்கள்! வீடியோ இதோ!

Summary:

Silence movie trailer released

ஹேமன் மதுக்கூர் இயக்கத்தில் மாதவன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைலன்ஸ். இப்படத்தின் அஞ்சலி, ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுஷ்கா காது கேளாத, வாய் பேச முடியாத ஓவிய பெண்ணாக நடித்துள்ளார். கோபி சுந்தர்  இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷெனியல் டியோ என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கிரைம் மற்றும் திரில்லர் படமான சைலன்ஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்தநிலையில், தற்போது அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று படம் ரிலீஸாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சைலன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது.


Advertisement