இது போதுங்க..ரொம்ப நன்றி! மிரட்டலுக்கு பயந்த தாய்! ரசிகர்களால் நெகிழ்ந்து போன சித்தார்த்!

இது போதுங்க..ரொம்ப நன்றி! மிரட்டலுக்கு பயந்த தாய்! ரசிகர்களால் நெகிழ்ந்து போன சித்தார்த்!


Siddharth thank to fan

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கக்கூடியவர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்ககூடியவர். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலையில் நடிகர் சித்தார்த் பாஜகவினர் தனது தொலைபேசி எண்ணை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டதாகவும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட கற்பழிப்பு, கொலை மிரட்டல் அழைப்புகள் வந்ததாகவும் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சித்தார்த்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

 மேலும் நடிகர் சித்தார்த் குடும்பத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில், இத்தகைய இக்கட்டான கால கட்டத்திலும் எங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் தமிழ்நாடு போலீசார்களுக்கு நன்றி என கூறியுள்ளார்.

 மேலும் மற்றொரு பதிவில், என் அம்மா மிகவும் பயந்துவிட்டார். அவருக்குத் தைரியம் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, அதனால், உங்கள் ட்வீட்களைதான் அவர்களிடம் படித்தேன். என்னுடன் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்த மிகவும் சாதாரண மனிதர்கள் நாங்கள். எங்களுக்கு உங்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளும் அத்தனை மதிப்புமிக்கவை என்று தெரிவித்துள்ளார்.