சினிமா

24 மணிநேரத்தில் 500 கொலைமிரட்டல் போன்கால்! நான் நிறுத்தமாட்டேன்! நடிகர் சித்தார்த் வெளியிட்ட ஷாக் பதிவு!!

Summary:

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சித்த

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கக்கூடியவர். மேலும் எதற்கும் அஞ்சாமல் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்ககூடியவர். இந்த நிலையில் சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலையில் நடிகர் சித்தார்த் பாஜகவினர் தனது தொலைபேசி எண்ணை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டதாகவும், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் மிரட்டல் வருவதாகவும் குற்றம்சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதாவது நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில், பாஜகவினரால் எனது தொலைபேசி எண் இணையத்தில் கசியவிடப்பட்டுள்ளது. இதுவரை 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல்கள் விடுத்து வந்துள்ளது. அனைத்து எண்களின் அழைப்புகளையும் பதிவு செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன். நான் வாயை மூடமாட்டேன். நீங்கள் முயற்சி செய்துகொண்டே இருங்கள் என பதிவிட்டுள்ளார்


Advertisement