"சாதி ஒரு சாபக்கேடு; அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்" நடிகர் சித்தார்த் அதிரடி ட்வீட்!

"சாதி ஒரு சாபக்கேடு; அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்" நடிகர் சித்தார்த் அதிரடி ட்வீட்!



sidarth-about-caste-in-tamil-cinema

தமிழ் சினிமாவில் சாதிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் குறிப்பாக கமல் இயக்கி நடித்த தேவர் மகன், விருமாண்டி போன்ற திரைப்படங்கள் அடங்கும். 

தேவர் மகன் திரைப்படம் பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போன்ற படங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை ஆதிக்கம் மிக்கவர்களாக காட்டப்பட்டிருக்கும். 

Sidarth about caste in tamil cinema

சில நாட்களுக்கு முன்பு தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக நடிகர் கமல் அறிவித்தார். 

இந்நிலையில் இன்று நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் சினிமாவில் சாதிகளை உயர்வாக காட்டக்கூடிய படங்கள் எடுப்பதை குறைக்க வேண்டும். படத்தின் தலைப்புகள், கருப்பொருள் மற்றும் வசனங்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினரை திரைப்படங்களில் உயர்த்தி காட்டுவதை கடுமையாக கண்டிக்க வேண்டும். சாதியானது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாபக்கேடு. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை அழிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 

இவர் இந்த சமயத்தில் இப்படி தெரிவித்திருப்பது ஒருவேளை நடிகர் கமலுக்கு விடும் எச்சரிக்கையாக இருக்குமோ என பலர் எண்ணுகின்றனர்.