சினிமா

பாடகர் எஸ்.பி.பிக்கு பாட்டு பாடி உருக்கமாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபல பாடகி! அதுவும் என்ன பாட்டுன்னு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர்,நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டு ரசிகர

தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளர்,நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி பாலசுப்ரமணியன். அவர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அவர் மறைந்தாலும் அவரது நினைவுகள் மறையா வண்ணம் ரசிகர்கள் அவர் குறித்த தகவல்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வர். இந்த நிலையில் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இன்று 75 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாடகி ஸ்வேதா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாடும் நிலாவே பாடலை பாடி, எஸ்.பி.பி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் அவர் எஸ்.பி.பி அவர்களது குரலாலும், இசையாலும் நமது வாழ்க்கை என்றும் நிறைந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். அவர் எப்பொழுதும் நம்முடன்தான் இருக்கிறார். எஸ்.பி.பி சார் நீங்க எங்கு இருந்தாலும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
 


Advertisement