சினிமா

பிலிம்பேர் விழாவில் வித்தியாசமான உடையில் சுருதிஹாசன்! வைரலாகும் புகைப்படங்கள்

Summary:

Shruthuhaasan new dress in flimfare awards

நேற்று மாலை நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுருதிஹாசன், சிகப்பு நிறத்தில் வித்தியாசமான உடை ஒன்றை அணிந்துவந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் கமலைப் போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் துவங்கியவர். இவர் 2000ஆம் ஆண்டு வெளியான கமலின் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சுருதிஹாசன். மெல்லிய உடல் அமைப்பு கவர்ச்சியான உடை மற்றும் நடனம் மூலம் ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர் சுருதிஹாசன். மேலும் ஒரு பாடகியாகவும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சுருதிஹாசன் கலந்துகொண்டார். பல்வேறு திரைபிரபலங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் சிகப்பு நிறத்தில் வித்தியாசமான உடை ஒன்றை அணிந்துவந்தார் சுருதிஹாசன். அவரது இந்த உடை பலரையும் கவர்ந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement