பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ருதி ஹாசன்- நடிகர் யார் தெரியுமா?

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ருதி ஹாசன்- நடிகர் யார் தெரியுமா?



shruthikasan-next-movie

உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் நடிகை ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன்  நடித்துள்ளார்  ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். 

shruthikasan
 
அதன் பிறகு சிறிது காலம்  படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன், இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இரண்டு வருடம் கழித்து விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் ஸ்ருதி நடித்துவருகிறார்.மேலும் ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.அதில் அவருக்கு ஜோடியாக  நடிகர் ராணா நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்தினை பிரகாஷ் என்பவர் இயக்குகிறார்.