காதலிக்க ஆசைப்படும் நடிகை ஸ்ருதி ஹாசன்! அவருக்கு எப்படிப்பட்ட காதலன் வேண்டுமாம் தெரியுமா?

காதலிக்க ஆசைப்படும் நடிகை ஸ்ருதி ஹாசன்! அவருக்கு எப்படிப்பட்ட காதலன் வேண்டுமாம் தெரியுமா?


shruthihasan talk about love


சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பு, இசை என பிஸியாகி விட்டார் நடிகை ஸ்ருதி ஹாசன். சமீபத்தில் தமன்னா மற்றும் பிரபுதேவா நடித்த திகில் திரைப்படமான ‘காமோஷி’ படத்தின் டைட்டில் ட்ராக்கைப் பாடியிருந்தார்.

அமெரிக்காவின், ‘யு.எஸ்.ஏ., – நெட்ஒர்க்’ என்ற, ‘டிவி’ சானலில், ‘டிரெட்ஸ்டோன்’ என்ற, சீரியலிலும் நடித்து வருகிறார்  நடிகை ஸ்ருதி ஹாசன். தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் சுருதிஹாசனை பேட்டி எடுத்துள்ளார்.

shruthi hasan

அந்த அப்பெட்டியில் நடிகை ஸ்ருதி ஹாசன் அவரது காதல் பற்றியும் பகிர்ந்தார். அவர் கூறுகையில் நான் காதலிக்க விரும்புகிறேன். சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன். 

எனக்கு காதலராக வருபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். நகைச்சுவைத்திறன் இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான் எனது ஆசை என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.