என்னது... மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகைதானா..வெளியான தகவல்.!

என்னது... மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகைதானா..வெளியான தகவல்.!


Shruthihaasan only first choice for mookuthi amman

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை ஆர்.ஜே பாலாஜியும் அவரது நண்பர் சரவணனும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் ஆர்.ஜே பாலாஜியும் இப்படத்தில் நடித்துள்ளார். அவர்களுடன்  இணைந்து இந்துஜா, மௌலி, ஊர்வசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்கிறார் என்றவுடன் பலரும் கிண்டல் செய்தனர். ஆனால் படம் வெளியான பின்பு மாடர்ன் அம்மனாக அவர் பெரும் வரவேற்பை பெற்றார். அதுமட்டுமின்றி இப்படம் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது.

Mookuthiamman

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மூக்குத்தி அம்மன் படத்தில் முதலில் அம்மனாக நடிகை ஸ்ருதிஹாசனை தான் ஆர்.ஜே.பாலாஜி தேர்வு செய்திருந்தாராம். ஆனால் அவரின் 
கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவெடுத்ததாக, ஆர்.ஜே. பாலாஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.