சினிமா

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு விரைவில் திருமணம்.. தீயாக பரவிய தகவல்.. ஸ்ருதிஹாசன் பதில்

Summary:

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானநிலையில் அந்த தகவல் குறித்து பதிலளித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியானநிலையில் அந்த தகவல் குறித்து பதிலளித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

பிரபல நடிகர் கமலஹாசனின் மகள் மற்றும் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதிஹாசன். நடிப்பு, இசை, பாடல் என பயங்கர பிசியாக இருந்துவரும் இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி, பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டநிலையில், சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். இதனை அடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிய ஸ்ருதிஹாசன் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்தார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப, திருமணம் குறித்த தகவலில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். 


Advertisement