புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
எப்புடி இருந்த சுருதிஹாசன் இப்படி ஆயிட்டாரே; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை எஸ்ஆர்எம் பலல்கலைகழகத்தில் நேற்று நடந்த மிலான் கலை நிகழ்ச்சியில் நடிகை சுருதிஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மிகவும் ஸ்லிம்மாக, சரியான உடல் வாகுடன் இருந்த சுருதி தற்போது எடை கூடி கொழுகொழுவென மாறியதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் கமலைப் போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் துவங்கியவர் இவர் 2000ஆம் ஆண்டு வெளியான கமலின் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சுருதிஹாசன். மெல்லிய உடல் அமைப்பு கவர்ச்சியான உடை மற்றும் நடனம் மூலம் ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர் சுருதிஹாசன். மேலும் ஒரு பாடகியாகவும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.
இந்நிலையில், சென்னை எஸ்ஆர்எம் பலல்கலைகழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மிலான் கலை நிகழ்ச்சி ஆனது நேற்று நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை சுருதிஹாசன் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுருதிஹாசனின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் சுருதிஹாசன் வழக்கத்திற்கு மாறாக உடல் எடை கூடி கொழுகொழுவென காட்சியளிக்கிறார். சுருதிஹாசனின் உடலமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றத்தை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.