சினிமா

எனக்கு அது முக்கியமில்லை! நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும் தயார்! நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன்டாக்!

Summary:

Shruthi hasan talk about movies

தமிழில் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் உலகநாயகனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் கதாநாயகியாக மட்டுமில்லாமல் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு சினிமாத்துறையில்  பெருமளவில் கலக்கி வருகிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால்  படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசன் பாட்டு பாடுவது, உடற்பயிற்சி செய்வது என வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன், கொரோனா ஊரடங்கு நேரத்தை வீணாக்காமல் வீட்டு வேலை, சமையல், இசை என்று கழித்துவருகிறேன். மேலும் கதை, கவிதையும் எழுதுகிறேன்.
எனது கையில் தற்போது மூன்று படங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துகிறேன். மேலும் இசைபணிகளுக்காக அடிக்கடி லண்டனுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. 

நான் சம்பளம் பற்றி யோசிப்பது இல்லை. அது எனக்கு முக்கியமான விஷயமும் இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருந்தால் வில்லியாக நடிக்கவும் தயார். இந்த ஊரடங்கில் சினிமா தொழிலாளர்கள் பலர் வேலையில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் தற்போது முக்கியம் என கூறியுள்ளார்.

 


Advertisement