சினிமா

அர்ஜுன் மீது அதிரடி பாலியல் குற்றசாட்டு, வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட பிரபல நடிகை, அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

shruthi hariharan released video as proof against arjun

நடிகர் அர்ஜூன் மீது தான் அளித்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வீடியோ என்னிடம் உள்ளது என நடிகை ஸ்ருதி ஹரிகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிபுணன் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜூன்  தன்னிடம் தவறான முறையில் நடந்துகொண்டார் என கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் மீடூ ஹாஷ்டாகில்  தெரிவித்திருந்தார்.

இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்த அர்ஜூன் ஸ்ருதி ஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். மேலும் நடிகை ஸ்ருதி ஹரிகரனும் அர்ஜூன் படப்பிடிப்பில் தவறாக நடந்துகொண்டதாகவும், ஹோட்டலுக்கு வருமாறும் அழைத்தார் என்று போலீசில் புகார் அளித்தார்.

இதனால், அர்ஜூன் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

arjun with shruthi hariharan க்கான பட முடிவு

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ருதி ஹரிகரன் பெங்களூருவில் மகளிர் அணித்தலைவியை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அர்ஜூன் மீது நான் கூறிய பாலியல் குற்றச்சாட்டு அனைத்தும் உண்மை,அதற்கான  வீடியோ ஆதாரம் என்னிடம்  உள்ளது. அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறேன் என ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ளார்.


Advertisement