புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"திருமணம் என்பதெல்லாம் எனக்கு வெறும் செய்தி மட்டுமே" பிரபல நடிகை ஓபன் டாக்
'திருமணச்செய்திகளில் துளியும் உண்மை இல்லை. அந்தச் செய்திகள் எனக்கு வெறும் செய்திகள் அவ்வளவுதான்' என்று நடிகை சுருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் நமது கமலஹாசன் வெறும் நடிகர் மட்டும் அல்ல. மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் கூட. இவருக்கு ஸ்ருதிகாசன், அக்ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இருவருமே தந்தையைப்போல சினிமாவிற்குள் வந்து தனி தனியாக கலக்கி வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நாயாகியாக அறிமுகமானவர் ஸ்ருதி.
நடிகை ஸ்ருதிஹாசனும் இத்தாலிய நாடக நடிகர் மைக்கேல் கார்சலேவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் இத்தாலியரான மைக்கேல் கார்சலே பட்டு வேட்டி, சட்டையுடனும் ஸ்ருதிஹாசன் பட்டுப்புடவையிலும் ஒன்றாகக் கலந்துகொண்டனர். இதில் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். இது சினிமா ஆர்வலர்களிடையே விவாதத்தைக் கிளப்பியது.
மேலும் அடிக்கடி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக்கேல் கார்சலேவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ருதிஹாசன், ''என்னைச் சிரிக்க வைப்பவன் நீ. இந்த உலகிலேயே அதுதான் மிகவும் முக்கியமானது'' போன்ற கமெண்டுகளையும் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதோடுமட்டுமல்லாமல் கடந்த புத்தாண்டு தினத்தன்றும் கார்சலேவுடன் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைபடங்களை ஸ்ருதி வெளியிட்டுருந்தார்.
அதனைத்தொடர்ந்து கமலின் அனுமதியுடன் ஸ்ருதி விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று செய்திகள் பரவின. அவற்றைக் கண்டு வெறுப்படைந்த ஸ்ருதி 'திருமணச்செய்திகளில் துளியும் உண்மை இல்லை. அந்தச் செய்திகள் எனக்கு வெறும் செய்திகள் அவ்வளவுதான்' என்று பதிலளித்திருக்கிறார்.