சினிமா

நான் இப்படிதான் சினிமாதுறைக்குள் வந்தேன்! ஆனால்.. நடிகை ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

Summary:

Shruthi haasan talk about nepotisam

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, சூர்யா, அஜித், விஜய், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு வாரிசு நடிகர், நடிகர்களே காரணம் என பரபரப்பான கருத்துக்கள் எழுந்தது. இந்நிலையில் பிரபல சினிமா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை ஸ்ருதிஹாசன் கூறியதாவது, நான் எனது அப்பா கமல்ஹாசனின் தயவால் தான் சினிமாதுறைக்கு  வந்தேன். நான் தமிழில் அறிமுகமான படம் ஏழாம் அறிவு, அதில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்தேன். அவரும் அவரது அப்பா சிவக்குமாரின் மூலமாகதான் சினிமாவிற்கு வந்தார். ஆனால், அதன் பிறகு தனது திறமையால் கடினமான உழைப்பால், முன்னேறி தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.

மேலும் சினிமாவில் நுழைவதற்கு மட்டுமே நாங்கள் எங்களது பெற்றோரை பயன்படுத்தினோம். அதன்பிறகு எங்களது சொந்த முயற்சியால்தான் முன்னேறி தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளோம்.  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவ்வாறுதான் நடைபெறுகிறது ஆனால் பாலிவுட் திரையுலகில் அவ்வாறு நடப்பதாக எனக்கு தோணவில்லை என்று  தெரிவித்துள்ளார்.


Advertisement