நடிகை ஸ்ருதிஹாசனா இது! ஸ்கூல் போகும்போது எப்படியுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படம்!

நடிகை ஸ்ருதிஹாசனா இது! ஸ்கூல் போகும்போது எப்படியுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் பள்ளிப்பருவ புகைப்படம்!



Shruthi haasan school days photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலகநாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். துவக்கத்தில் பின்னணி பாடகியாக இருந்த ஸ்ருதிஹாசன் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

 இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ருதி 3, பூஜை, சிங்கம் 3, புலி,வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2009இல் ஹிந்தியில் வெளியான லக் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இந்த நிலையில் ஸ்ருதி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பள்ளிக்கால புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.